சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வாழ்வினை மீண்டும் தொடங்கும் வகையில் நகரத்தை நோக்கி வரும் மக்களுக்கு அபராதம் போடும் வகையில் சுங்க கட்டண உயர்வு அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெறுவதோடு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பொது முடக்க தளர்வினை அளித்துள்ள மாநில அரசும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பொருளாதார உதவிகளை செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.