ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த படம் தான் ‘அந்தாதூன்’. இதன் தமிழ் ரீமேக்கை டைரக்டர் மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.

90களின் கனவு நாயகன் பிரஷாந்தை லீடாக வைத்து ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கை இயக்க மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார். இதில் முக்கிய ரோலில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகி நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டது. ஆனால் படத்திற்கு சம்பளமாக நயன்தாரா 6.5 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இது படத்தின் பட்ஜெட்டுக்கு நிகராக இருப்பதால் அவரை நீக்கிவிட்டு இப்போது வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

என்ன தான் பிரஷாந்த் இப்போ ஃபீல்ட் அவுட்டா இருந்தாலும் இப்படியா ஒரேயடியா சம்பளம் கேக்குறது ஒரு நியாயம் வேணாமா. இதில் நடிகர் கார்த்திக் மற்றும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தாமியுள்ளனர்.