துல்கர் சல்மான் நடிப்பில் அன்மையில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் கவணமீர்த்த படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பையும் தேடிக் கொடுத்துள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கில் வீட்டிருந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி தேசிங்கு பெரியசாமியை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக் கூறி தனக்காகவும் ஒரு கதையை தயார் செய்யும் படி கூறியிருந்தார். அதுக்கான வேலைகளில் தேசிங் ஈடுப்பட்டு வந்த போது நடிகர் சிவகார்த்திகேயன் இவரை அழைத்து தனக்கு ஒரு கதை தயார் செய்யும் படி கேட்டு அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்.

தற்போது தேசிங்கிடம் இரண்டு முக்கிய நடிகர்கள் கதை கேட்டுள்ளதால் யாருக்கு முதலில் கதையை சொல்வது யாரை முதலில் இயக்குவது என குழப்பத்தில் உள்ளாராம். சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் நிச்சயம் ஒதுங்கி அவருக்கு வழிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் தேசிங்கு பெரியசாமி சார்.