பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நஞ்சு கொடுத்து கொல்லப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் சி.பி.ஐ.யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதேநேரம் மும்பையில் நடத்தப்பட்ட உடல்கூறு ஆய்வில் சில குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என எய்ம்ஸ் குழு தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ ,அமலாக்கத் துறை மற்றும் போதை தடுப்பு பிரிவு துறை என மூன்று விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சு சாம்திங் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததாக அது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீட் சிங், சதா கபூர் உள்ளிட்ட நடிகைகளிடம் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. உடற்கூறாய்வின் அடிப்படையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்து வரும் நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினரும் ரசிகர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த சூழலில் சுஷாந்தின் உடற்கூறாய்வு பற்றி எய்ம்ஸ் மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வில் முடிவடைந்தது. அதற்கான அறிக்கை சிபிஐயிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. அந்த அறிக்கையில் சுஷாந் சிங் நஞ்சு கொடுத்து கொல்லப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் உண்மை மருத்துவமனையில் ஏற்பட்ட உடற்கூறு ஆய்வில் சில விஷயங்களை மருத்துவர்கள் கவனிக்கத் தவறி உள்ளனர் என்றும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்திருப்பது இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங்கின் குடும்ப வழக்கறிஞரான விகாந்த் சிங்கும் அவர் கொல்லப்பட்டதற்கான புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். விஷால் சிங் தற்கொலை செய்து கொண்ட புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கு தான் அனுப்பி வைத்ததாகவும் அதைப் பார்த்த மருத்துவர்கள் சுஷாந்த் சிங் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் 200% வரை இருப்பதாக கூறியிருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.சி.பி.ஐ அதிகாரிகளும் இவ்வழக்கு தொடர்பாக கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் விட்டுவிடாமல் அனைத்தையும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் சுஷாந்த்சிங்கின் தற்கொலை வழக்கில் பல அதிரடியான விவகாரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.