போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லம் சசிகலாவுக்கு சொந்தமானது அல்ல என்றும் அந்த இடம் ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் வருமான வரி அதிகாரிகளின் தவறான அணுகுமுறையே இதற்கு காரணம் என்றும் கூறினார்.

அவர் பேசுகையில், நான் உறுதியாக நம்புகிறேன் செப்டம்பர் மாத இறுதிக்குள் சசிகலா அவர்கள் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் நான் விருப்பப்படி கூறவில்லை அவர் வெளியே வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளது என்றும் சட்டத்தில் எண்ண இடமிருக்கிறது கர்நாடக சிறைத்துறையில் என்ன விதிமுறைகள் இருக்கிறது என்று பார்க்கும் போது செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி என்பது ஒரு கணக்கு என்றும் செப்டம்பர் இறுதி வாரத்திலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியே வரலாம் என்றும் இதை நான் சிறைத்துறை அளிக்கும் சலுகைகள் கொண்டே இதை நான் கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் இல்லம் சசிகலா உடையது அல்ல என்றும் அது ஒரு நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் என்றும் 2013- 2014 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்து என்றும் வருமான வரித் துறையினரின் தவறான அணுகுமுறையே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.