கோலிவுட்ட்டில் தற்போது மிகப்பெரிய பேசுப்பொருள் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம் தான். அக்டோபர் 30-ம் தேதி அமேசான் தளத்தில் அந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க ஏற்கனவே நடந்த முடிந்த பட வியாபாரத்தை தனுஷ் தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அவர் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

‘சூரரைப்போற்று’ தியேட்டர் ரிலீஸுக்காக ரசிகர்கள் மட்டுமல்ல தியேட்டர் ஓனர்களுமே காத்திருந்தனர். ஆனால், படம் அமேசான் தளத்திற்கு விற்கப்பட்டதால் இதற்கு கடுமையான எதிர்ப்பும் சிலரிடமிருந்து ஆதரவும் கிடைத்தது. இன்று இந்த ஓடிடி ரிலீஸ் பிரட்சனை ஓய்ந்த பாடில்லை. இதனிடையே தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி ரிலீஸ்க்கு விலை பேசப்பட்டு வருகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் கிட்டதட்ட முடிந்திட்ட நிலையில் சூர்யாவுக்கு வந்த எதிர்ப்புகளை கண்டு பயந்த தனுஷ் பட வியாபார விஷயத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டார். நல்ல லாபத்திற்கு வைக்கப்பட்ட படத்தை தடுத்து நிறுத்தியதால் தனுஷ் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.