தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமிடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சென்னையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் கிளம்பின .கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்து சேவையை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மண்டலங்களுக்கு இடையேயான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் தொற்றின் வீரியம் அதிகரித்ததால் அதுவும் பின்னர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொது போக்குவரத்து சேவைகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்து இன்று மட்டும் சுமார் 400 பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டன. அதிகாலை முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு விரைந்த பயணிகள் நீண்ட காத்திருப்புக்குப் பின் சொந்த ஊர்களுக்கு கிளம்பின. முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதைப்போல கோவையில் இருந்தும் அதிகாலை முதலே வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குன்னூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பேருந்துகள் கிளம்பின.

இன்று அங்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆதார் அட்டையை காண்பித்து உள்ளூர்வாசி என உறுதி செய்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அண்டை மாவட்டமான ஈரோட்டிலிருந்து 130 பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு சென்றன. மதுரையை பொருத்தவரையில் வேலூரிலிருந்து 26 அரசுப் பேருந்துகளும் புதிய 35தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. புதுக்கோட்டை, நாகை, தேனி,தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆட்டத்திலிருந்து சுமார் 40 முதல் 60 சதவிகித பேருந்துகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. முதல் நாள் என்பதால் பல இடங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.