‘பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸின் மார்கெட் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி பிரபாஸ் தொடர்ந்து பெரிய பெரிய பட்ஜெட் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராமயணக் காவியத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக படமாக்க உள்ளனர், படத்தின் பட்ஜெட் 500 கோடி என சொல்லப்படுகிறது. இதில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ. 250 கோடி செலவிட ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ஹாலிவுட் சினிமாவின் ‘அவதார்’ பட கிராஃபிக்ஸ் நிறுவனத்தை படக்குழு அணுகியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு,ம் கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

‘ஆதிபுருஷ்’ இயக்குனர் ஓம் ராவத் இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானை ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் சையிப் அலிகான் இராவணன் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.