ஜிஎஸ்டி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தேசிய இனங்கள் மொழிகள் மகன்கள் உள்ள இந்தியாவை ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கபட நோக்கம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக ஸ்டாலின் கோரியுள்ளார்.

மத்திய பாஜக அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான அரசா அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா என்று மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.