பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏ.ஐ.சி.டி.இ யின் தலைவர் அனில் சரஸ்ரபுதே தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும தலைவர் அனில் சரஸ்ரபுதே இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். அரிய தேர்வை ரத்து செய்து இருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்றும், அரிய தேர்வு பற்றி தமிழக அரசு தரப்பிலிருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் பின்னணி என்னவென்றால் ஏப்ரல், மே மாதத்தில் தேர்வு எழுதுவதற்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கபடவேண்டும் என்ற அறிவிப்பை முன்னதாக தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. தமிழக அரசினுடைய இந்த முடிவு ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.

தற்போது ஏ.ஐ.சி.டி.இ யின் தலைவர் அனில் சகஸ்ரபுதே இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். தேர்வு எழுதாமல் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏற்க தக்கது அல்ல என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கடிதம் எதுவும் உங்களுக்கு எழுதி இருந்தாரா என்ற கேள்விக்கு ஆமாம் அவர் கடிதம் எழுதியிருந்தார் அதற்குத்தான் இது போன்ற ஒரு முடிவால் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் என்பது தொழில் நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் தமிழக அரசு இதுகுறித்து தங்களுக்கு ஏதும் பதில் எழுதி இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது அதற்கு தமிழக அரசிற்கு நானோ , தனக்கு தமிழக அரசோ எந்த ஒரு கடிதமும் எந்த ஒரு தகவலும் பகிரப்படவில்லை இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் துணைவேந்தரால் தொடரப்பட்டிருக்கிறது அந்த வழக்கில் ஏ.ஐ.சி.டி.இ தன்னுடைய முடிவை தெரிவிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சுற்றறிக்கை வழங்குமா என்ற கேள்விக்கு, அதற்கு ஏ.ஐ.சி.டி.இ தன்னுடைய முடிவை நீதிமன்ற வழக்கில் பதிலளிக்கும்போது தெரிவிக்கும் என்ற கருத்தை ஏ.ஐ.சி.டி.இ ன் தலைவர் அனில் சகஸ்ர புதே தெரிவித்திருக்கிறார்.