குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோரணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். வழக்கமான மருத்துவமனை பரிசோதனைக் காக துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்றைய தினம் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

அவருடன் அவரது மனைவியும் சென்றிருக்கிறார். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோணா தொற்று உறுதியாகியிருக்கிறது. அவருக்கு ஏ-சிம்டமெட்டிக் அதாவது எந்தவித ஒரு அறிகுறியும் இல்லாமல் இருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் அவர் தற்போது வரை நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.

அவருக்கு காய்ச்சல் சளி இருமல் என எந்தவித அறிகுறியும் இல்லை என்பது தெரிகிறது.தொடர்ச்சியாக அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் அமைக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.