சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய இரண்டும் படங்களுமே வெற்றிப் பெற்றதை தொடர்ந்து இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது.

வட இந்தியாவில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நடத்தப்பட்டு வந்த இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
முதல் இரண்டு பாகங்களிலும் பேய் பிடித்த கதாப்பாத்திரத்தில் ஆண்ட்ரியாவும், திரிஷாவும் நடித்திருந்தனர். பேயாக ஹன்சிகா நடித்திருந்தார்.

மூன்றாவது பாகத்தில் நாயகனாக ஆர்யா நடிக்க, நாயகிகளாக ஆண்ட்ரியாவும் ராஷி கண்ணாவும் நடித்து இருக்கின்றனர்.
பேய் படம் என்றாலே நாயகிக்கு தான் பேய் வேடம் என்று மக்களிடையே இருந்த பிம்பத்தை உடைத்து ஹீரோவுக்கு பேய் வேடம் கொடுத்து நடித்தவர் ராகவா லாரண்ஸ். அதேபோல் அரண்மனை மூன்றாம் பாகத்தில் பேய் கதாப்பாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு படத்திலும் தனக்கென சிறப்பான இடத்தை பெறுபவர், கண்டிப்பாக இந்த பேய் வேடத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...