ஹாலிவுட் துவங்கி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ தான் - பிக் பாஸ். ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் பிரபலங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். தற்போது அடுத்த சீசனுக்கான வேலைகள் அனைத்து மொழிகளிலும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-ன் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் நாகர்ஜுனாவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர்., “இதுவரை இல்லாத Entertaintment” என்ற கேப்ஷனோடு வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருவதுடன், பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.