திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வீடியோ கடைக்கு கொரியர் மூலம் வெடிபொருட்களை அனுப்பிவைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வீடியோ கடைக்காரர் உரிமையாளர் வீரகுமார் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தஞ்சாவூரைச் சேர்ந்த அமீர் சையத் , அறந்தாங்கி மாவட்ட தா ம க துணைத்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். திருச்சியில் செயல்படும் எல்ஃபின் இ கம் கம்பெனியை மிரட்டி இவர்கள் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதாகவும் அதை தராததால் அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வீரகுமாருக்கும், உரத்த நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும்

எல்பின் e-com கம்பெனி மிரட்டியது போல் வெடிபொருள் பொருட்கள் பார்சல் அனுப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு உதவிய பெண் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.