ஷாருக்கான் நடித்த பல வெற்றிப்படங்களை தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படத்தில் ஷாருக்கான் நடித்தாக வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டதால் அட்லியின் படத்தை தள்ளி வைத்துவிட்டு யாஷ் ராஜ் நிறுவனத்தின் படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார்.

‘பதான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகவுள்ளது. ஆகையால், இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அட்லி படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ஷாரூக்கான். சமீபத்தில் தான் இப்படத்தின் கதையை முழுமையாக ஷாருக்கானிடம் அட்லி கூறியதாக சொல்லப்பட்டது. அடுத்த ஆண்டு சம்மருக்கு பின் துவங்கவிருக்கும் இந்த படத்தில் ஷாருக்கான் ஒரு அண்டர் கவர் போலீஸாக நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கோலிவுட்டில் வரிசையாக விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி இந்த படம் மூலமாக பாலிவுட் எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டுள்ளார். அட்லியின் திட்டம் அவருக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.