தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்வு முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஏற்க மறுத்துருக்கிறது. அரியர்ஸ் பாடங்களுக்கு பணம் கட்டி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை அன்மையில் தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரியர்ஸ் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் ஏற்க மறுப்பு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வது ஏற்புடையதல்ல என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஏஐசிடிஇ என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய ஒரு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரைக்கும் தமிழக அரசினுடைய சமீபத்திய அந்த அறிவிப்பின் படி அரியர் மாணவர்கள் ஏப்ரல் மே மாதத்தில் தேர்வு எழுதுவதற்கான தன்னுடைய அரியர் பாடங்களுக்காக கட்டணம் செலுத்தியிருந்தால் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கலாம் மதிப்பெண் அடிப்படையில் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தற்போது ஏஐசிடிஇ -லிருந்து ஒரு மின்னஞ்சல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில் தமிழக அரசு எடுத்து இருக்கக்கூடிய இந்த முடிவு அதாவது அரியர் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதாக அறிவித்திருப்பது சரியான முடிவாக இல்லை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்ற ஒரு கருத்தை ஏஐசிடிஇ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதன்பின் இது சார்ந்து வேறு ஏதேனும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என உத்தரவு ஏதும் ஏஐசிடிஇ தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் ஆராயப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இப்படியான ஒரு மின்னஞ்சல் வந்திருப்பது உண்மை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.