பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராசா, புதிதாக தேர்வு பெற்றுள்ள எங்களையெல்லாம் வாழ்த்தி, பாராட்டி இங்கே பேசி இருக்கிறீர்கள் நன்றியுரையாகவும், ஏற்புரையாகவும் ஒரு நிமிடம் உங்கள் இடத்திலேயே பேச விரும்புகின்றேன் எனவும் தலைவர் கலைஞர் இருக்கும் இடம் நோக்கி வணங்கி அவருக்கு அடிபணிந்து நம்முடைய தலைவர் அவர்கள் ஆற்றி இருக்கின்ற இந்த மகத்தான பணிக்கும் , தேர்வு செய்ததற்கும் முதலில் அவருக்கு என்னுடைய நன்றி நான் காணிக்கையாக்கி கொள்கின்றேன் எனவும்,எல்லோரும் பேசினார்கள் எங்களைப் பற்றி அண்ணன் துரைமுருகன் அவர்களை பற்றி அதேபோல டி ஆர் பாலு அவர்களைப் பற்றி கே என் நேரு அவர்களை பற்றியெல்லாம் பேசினார்கள்.

நான் இந்த மேடையை ஒரு விதமாகத்தான் பார்க்கின்றேன் ஒரு மிகப்பெரிய ஆளுமைக்கு இருக்கக்கூடிய கலைஞரின் மகனான உங்களுக்கு இருக்கின்றது என்பதை நான் சத்தியமாக பார்க்கின்றேன். ஏனென்றால் அண்ணன் துரைமுருகன் ஒரு முறை நானும் கலைஞர் அவர்களும் துரைமுருகன் அண்ணன் அவர்களும் உரையாற்றிக் கொண்டிருந்தோம், அப்போது விவாதம் வந்தது அந்த விவாதத்தின் இறுதியிலே அண்ணன் துரைமுருகன் கொஞ்சம் எங்களோடு உரிமையோடு கேட்டார் நீ எந்த ஆண்டு பிறந்தாய் என்று கேட்டார் அதற்கு நான் 1963 என்று சொன்னேன். அதற்கு அவர் 'அண்ணே நீங்களும் நானும் மொழிப்போர் தியாகத்தில் உள்ளே இருக்கும்போது பிறந்த குழந்தை அண்ணே இந்த பையன் என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைவர் இடத்திலேயே சொன்னார். இப்போது நான் இந்த மேடையை பார்க்கிறேன் அப்படிப்பட்ட நீங்களெல்லாம் பொதுச்செயலாளர் அண்ணன் முரசொலி மாறன் அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து இவன் நன்றாக நாடாளுமன்றத்திலேயே பணியாற்றுகிறான் என்று என்னை டி ஆர் பாலு அண்ணன் என்னை கொண்டு போய் மாறன் இடத்திலேயே ஒப்படைத்தார்கள். அவர் என்றைக்கு பொருளாளர் அதேபோல மறைந்த அண்ணன் சிவசுப்ரமணியம் அவர்களும் நேரு அண்ணன் அவர்களும் என்னை நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட வேண்டும் என்று 1996 களிலேயே அறிந்திருந்தார்கள்.

அந்த நேரத்திலேயே அண்ணன் மேடையில் இருக்கிறார். இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் திராவிடர் கழகத்தில் நான் இருந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்த பொன்முடி இந்த மேடைக்கு வருகிறார். எனவே இந்த மேடையை அலங்கரிக்கின்ற இந்த மூத்த தலைவர்கள் அமர்கின்ற அந்த மேடையில் எனக்கும் தலைமுறையைத் தாண்டி ஒரு இடம் கொடுத்த உங்களை நான் பாராட்டி மகிழ்கிறேன் நன்றி தெரிவிக்கின்றேன். இன்னொன்று சமூக நீதி பார்வையில் அக்கறையுள்ள ஒருவர் என்பதை நீங்கள் தலைவர் கலைஞர் வழியிலே நிரூபித்திருக்கிறீர்கள் எனவும் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் ஆதிதிராவிடருக்கு என்று ஒரு பதவி இருக்கிறது. அந்த பதவியில் ஏற்கனவே அந்தியூர் செல்வராஜ் அவர்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அதையும் தாண்டி இடத்தை ஐந்தாக்கி பொதுப்போட்டியிலும் ஒருவர் வரமுடியும் என்கின்ற சமூகநீதியை காப்பாற்றி இருக்கிறீர்கள் அதற்காக உங்களை வணங்கி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என அவர் கூறினார்.