தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், ஒருபுறம் ஆளும்கட்சியும் மறுபுறம் எதிர்க்கட்சியும் இருக்க, இடையில் ரஜினி, கமல் போன்ற திரைப்பிரபலங்களும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை ஒட்டி அவரையும் அரசியலுக்கு வருமாறு மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளையோடு சூர்யா திரைக்கு நடிக்க வந்து 23 வருடம் ஆகிறது. எனவே ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் “திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே” என போஸ்டர் ஒட்டி மேலும் பரபரப்பு கூட்டியுள்ளனர் சூர்யா ரசிகர்கள். தமிழகமே அரசியல் கலத்தில் சூடுப் பிடிக்க காத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் இது போன்று போஸ்டர்கள் வாயிலாக நடிகர்களை அரசியலுக்கு அழைப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது...