மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் மாநில அளவில் சட்டங்களை ஏற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும்படி காங்கிரஸ் ஆளும் முதல்வர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் விட்டிருக்கும் அறிக்கையில் அரசமைப்பின் 254 ஆவது பிரிவை பயன்படுத்தி சட்டம் ஏற்ற காங்கிரசை ஆளும் மாநிலங்களுக்கு சோனியாகாந்தி அறிவித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள முடியாத வேளாண் சட்டங்களை முறியடிக்க முடியும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார்.