நடிகராக சுந்தர்.சிக்கு இருக்கும் ஃபேன்ஸ் மிகக் முறைவு தான் ஆனால், ஒரு இயக்குனராக இவருக்கேன தனி பட்டாளமே இருக்கிறது. சுந்தர்.சி படத்திற்கென்று தனி மார்கெட் உண்டு, இப்படி இருக்க இவர் ரீமேக் படங்களில் கவணம் செலுத்துவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

2013ஆம் ஆண்டு தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அத்தாரிண்டிகி தரேடி’ எனும் படத்தை தமிழில் சுந்தர்.சி இயக்கிருந்தார். சிம்பு நடிப்பில் ‘வந்தாராஜாவாதான் வருவேன்’ எனும் தலைப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம் படு தோல்வி அடைந்தது. சுந்தர்.சிக்கு இந்த தோல்வி பெரிய இழப்பை தரவில்லை என்றாலும் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மாயாபஜார்’ எனும் எனும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம் சுந்தர் சி. இந்த படத்தை தன்னுடைய சொந்த அவ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குனர் ஒருவரை இயக்குனராக கொண்டுவர திட்டமிட்டுள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் பட வாய்ப்பை வழங்குவது போல் சுந்தர்.சியும் தற்போது கலமிறங்கியுள்ளார். அதே சமயம் இவரே அதில் லீட் ரோலில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.