அரியர் தேர்வுகள் இரத்து செய்வது யுஜிசி இன் விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . அரியர் தேர்வு ரத்து குறித்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் , வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யனும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ராம்குமார் ஆதித்யன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பால குருசாமியின் வழக்கையும் நீதிபதிகள் சேர்த்து எடுத்துக் கொண்டனர்.

அப்போது இரண்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் யுஜிசி விதிமுறைகளுக்கு முரணாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அரியர் இல்லாதவர்களை தேர்ச்சிபெற செய்யக்கூடாது என யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. அந்த விதி முறைக்கு எதிராக தமிழக அரசு பெற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் இதுபோல் தேர்ச்சி அடைவது மாணவர்களின் எதிர்காலம் அளவு பாதிக்கப்படும் எனவும் தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசின் தரப்பிலான அரசு தலைமை வழக்கறிஞர் இறுதி வருட தேர்வைத்தான் ரத்துசெய்து மாணவர்களைத் தேர்ச்சி அடைய செய்யக்கூடாது என யுஜிசி ரத்து செய்ததாகவும் அதேபோல பேரிடர் மேலாண்மை விதிகளின் அடிப்படையில் தான் மாணவர்கள் தேர்ச்சி அடைய செய்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதி சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் குறுக்கிட்டு இந்த வழக்கு குறித்த விரிவான விளக்கத்தை யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞரான அவரும் தமிழக அரசு தரப்பின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.