சமீபகாலமாக சீரியல் தொடர்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் பிரபலமாக வளர்ந்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் ‘நாயகி’ சீரியலுக்கென தனி ரசிகர்கள் உண்டு. இந்த சீரியலில் நடித்து பிரபலமான நடிகை வித்யா பிரதீப் இனிமேல் சீரியலே வேண்டாம் சினிமாவில் மட்டுமே நடிக்க போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் நாயகியும் ஒன்று.
இத்தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த வித்யா பிரதீப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சீரியல், சினிமா என இரண்டு திரையுலகிலும் இவர் பங்களித்து அசத்தி வருகிறார். அருண் விஜயுடன் தடம், மாரி 2, களரி, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘எக்கோ’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் கைவசத்தில் ஒத்தைக்கு ஒத்தை, அசுரகுலம், தலைவி போன்ற படங்களை வைத்துள்ளார். தடம் படத்திற்கு முன்பு கூட 6 படங்கள் கைவசம் வைத்திருந்த இவர் சீரியல் கமிட்மெண்ட்டால் 6 பட வாய்ப்புகளையும் இழந்தார், இதனால் இந்த முறை எந்த படத்தையும் தவரவிட்டு விடக்கூடாது என இவர் ஒரு முடிவெடுத்துள்ளார். இவர் இனிமேல் சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.