ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து திடீரென்று உயர்ந்திருக்கிறது. ஒகேனக்கலை பொறுத்த வரைக்கும் தற்போது இந்த நீர் வரத்தானது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பொறுத்தவரைக்கும் ஒகேனக்கலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீராக இருந்து வந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவின் காரணமாக நீர்வரத்தானது குறைந்தது. தற்போது நகரங்களை பொருத்தவரைக்கும் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

இந்த தண்ணீரை பொறுத்தவரைக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மழையின் காரணமாக வில்லிபுத்தூர் ,நாற்றம் பாளையம் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்த நீர்வரத்தானது அதிகரித்திருக்கிறது. தற்போது கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை அங்கும் தற்போது இரண்டு வாரங்களுக்கு பிறகு கனமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கர்நாடகாவை பொறுத்தவரையிலும் அங்கு உள்ள 100% சதவிகிதம் அணை நிரம்பியிருந்தது. தற்போது தனது 90% சதவிகிதம் அளவிலான நிறைந்திருக்கிறது. கிருஷ்ணராயபுரம் அணையிலிருந்து 5 ஆயிரத்து 309 கனஅடி தண்ணீரும் சபரி அணையில் இருந்து 1500 அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு 16 ஆயிரம் அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய பொருத்தவரைக்கும் 5 ஆயிரம் கன அடி தண்ணீராக இருந்தது. இன்று16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலை பொருத்தவரைக்கும் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் பெரிய அளவிலான தண்ணீர் கிடையாது.

ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சத்திற்கு மேலாக சென்றால் தான் காவேரி கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடப் படும். கடந்தாண்டில் பொருத்தவரைக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இந்த வருடத்தை பொருத்தவரைக்கும் ஒன்றேகால் லட்சம் கன அடி அளவிலான தண்ணீர் மட்டும் இருந்து வருகிறது. இந்த தண்ணீரானது இரண்டு நாட்களில் மேட்டூர் அணையை சென்றடையும். மேட்டூர் அணையை பொருத்தவரைக்கும் தற்போதைக்கு 90 அடியை விட சரிந்து வருகிறது. இந்த நில வரத்தால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்மட்டம் உயர கூடும்.