அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நம்பியூர் பகுதிகளில் 25 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணி களுக்காக பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மட்டும் மாணவர்களை பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிக்கு வரலாம் என்ற ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்து துறைகளும் சேர்ந்து ஆய்வு செய்தபிறகே முதலமைச்சர் தெளிவான முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

வரும் 29ஆம் தேதி அனைத்து துறை அலுவளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன் அதனை தொடர்ந்து தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்தார். 1ஆம் தேதி சந்தேகம் இருக்கும் மாணவர்களுக்கு சந்தேகத்தை தீர்ப்பதற்காக விருப்பம் இருந்தால் வரலாம் என்றுதான் அந்த அறிவிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.