மூன்று வருடங்களுக்கு முன்னால் சென்னையே பரபரப்பாக பேசிய ஒரு கொலை வழக்கு தான் நுங்கம்பாக்கம் சுவாதி மர்டர். இந்த கொடுர கொலையின் பின்னணி இன்றும் விளங்காத மர்மமே.

இந்த சுவாதி கொலை வழக்கு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு Ninஉருவாகியுள்ள 'நுங்கம்பாக்கம்' திரைப்படத்தின் மீது ராம்குமார் குடும்பத்தை சேர்ந்தோர் தொடுத்த வழக்கு மற்றும் திரைப்படத்தின் மேல் உள்ள அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்கபடாமல் இருக்கிறது. இதனால் பல படங்கள் ஓடிடியை நோக்கி செல்ல துவங்கிவிட்டது, இதனால் அடுத்த பிரச்சனை ஏதும் வருவதற்குள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.