அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கும் சூழலில் , சில அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில செய்திகளும் ஆங்காங்கே வெளிவருகின்றன.திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பில் மாணவர்கள் பாடப்பிரிவு பொருத்து கட்டணங்கள் மாறுபடுவதாக கூறுகின்றனர் மாணவர்களும் பெற்றோர்களும். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து விதமான 1230 அரசு பள்ளிகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள அரசு பள்ளிகளை நாடி வரும் மாணவர்களிடம் விரும்பும் பாடப்பிரிவு மட்டுமின்றி பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் கட்டணம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ‌. அரசு பள்ளிகளுக்கு வருபவர்களெல்லாம் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்தான் வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு குரூப்பில் இருக்கும் போது 6000 பணம் கட்டுங்கள் 5000 பணம் கட்டுங்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு எந்த ஒரு ரசீதும் கொடுப்பதில்லை. அதிகமாக சேரும் அரசு பள்ளிகளில் கூடுதல் வசதிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தட்டான் கேட்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனையும் தவிர்க்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறார் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

இதுபற்றி அவர் கூறுகையில், முக்கியமாக இந்த கொரோணா காலகட்டத்தில் பெற்றோர்களிடமிருந்து எந்த விதமான பணமும் வசூல் செய்யக்கூடாது என சொல்லி இருக்கிறோம். அந்த மாதிரி ஏதாவது பள்ளிகளில் கட்டணம் கேட்கிறார்கள் என்றால் அந்த பெற்றோர் என்னிடம் கூறினால் அதற்கு நான் உடனே நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறினார். கட்டணமின்றி நல்ல கல்வியைப் பெறுவதற்காக அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை அதுவும் கொரோனா சூழலில் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.