சென்னை வேளச்சேரியில் கஞ்சா போதையில் கடை உரிமையாளரை சரமாரி யாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

நேரு நகரில் மளிகை கடையில் பொருள் வாங்க வந்த பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை கடை உரிமையாளர் குமாரசாமி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சக நண்பர்களை அழைத்து வந்து குமாரசாமி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் குமாரசாமி தலையில் பலத்த காயம் அடைய இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.