கோவையில் குடும்பத் தகராறில் கத்தியால் குத்தி கணவனை கொலை செய்து விட்டு எதிர்பாராத விதமாகக் அத்திப்பட்டு உயிரிழந்ததாக கூறி நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த பிராங்கிளின் பிரிட்டோ என்பவர் கழுத்து வயிறு பகுதியில் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் காய் வெட்டும் போது எதிர்பாராத விதமாக பின்னால் நின்ற கணவன் மீது கத்தி பதிந்தாக உயிரிழந்த கணவரின் மனைவி கரோலின் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரலோனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத் தேவைக்காக அடமானம் வைத்த தாலியை மீட்டுத்தரக் கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு நாடகமாடியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து காரோலினை காவல்துறையினர் கைது செய்தனர்.