வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.ஆகஸ்டு 31ஆம் தேதி வரையிலான ஆறுமாத தவணை வரும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அவர் முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் சார்பில் உசார் லேகா சற்று முன்னர் வாதங்களை முன் வைத்திருந்தார் . அதில் முக்கியமான ஒன்றாக வங்கித்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.கொரோனா பொதுமுடக்கத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை புணரமைக்க போதிய திட்டங்கள் தேவை பொருளாதாரத்தை சீரமைக்க வங்கித்துறை அவசியமாகிறது. வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யப் போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாறாக வங்கி கடன்களை செலுத்துவதில் சில தளர்வுகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் கடன்கள் உள்ளிட்டவற்றிக்கு தவணை உரிமை காலத்தை வழங்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன்களுக்கான தவனை உரிமை காலம் அளிப்பதன் நோக்கம் வட்டியை தள்ளுபடி செய்வது அல்ல மாறாக கடன்களை செலுத்த காலத்தை தள்ளிவைப்பது தவனையுரிமை காலத்தின் நோக்கமாகும். வணிகம் தொடர்ந்து இயங்க ரொக்க சிலாமானி நிலை அவசியமாகிறது என்ற ஒரு வாதத்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த பயன்களை பெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வாதத்தையும் தெரிவித்திருந்தார். மேலும் கடன் உரிமை தவணை காலத்தில் பயன் பெறுவோர் வாராக்கடன் பட்டியலில் செப்டம்பர் 1ஆம் தேதி சேர்க்கவில்லை என்ற ஒரு வாதங்களையும் தற்போது மத்திய அரசின் சார்பில் புஷார் மேதா முன்வைத்தார். உச்சநீதிமன்றம் மிக முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளது. அதில் இந்த கடன் தவணை உரிமை காலத்து சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டது. ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒரு கருத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் இதில் நாங்கள் ஒன்றும் ஒரு நிபுணத்துவம் பெற்ற அமைப்பு அல்ல இதில் அனைத்து முடிவுகளும் இந்த நிதிசார் நிறுவனங்களும் இந்த வங்கிகளும் தான் எடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தையும் இந்த கொரோனாவால் பாதிக்கபபட்ட அனைத்து துறையினருக்கும் துறைவாரியாக அளிக்கவேண்டிய நிவாரணத்தை ஆய்வு செய்ய ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமும் ஆய்வு நடத்த வேண்டிய அவசியத்தையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எந்த ஒரு அமைச்சகமும் இந்த ஒரு விவகாரத்தில் துறை சார்ந்த நிவாரணங்களை வழங்க யோசனையே செய்யவில்லை என்று கருத்தையும் தற்போது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.