தமிழகத்தில் பொது முடக்க தளர்வுகள் நாளையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழு உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அவருடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு சற்று நேரத்திற்கு முன்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடைய ஆலோசனையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த பொதுமுடக்க தளர்வுகள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் பொது முடக்க தளர்வுர்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்தாம் கட்ட தளர்வுகளை அறிவித்த பிறகு தமிழக அரசு தொடர்ந்து தன்னுடைய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளர்வுகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் முழுமையாக இந்த பொது முடக்கத்தை தளர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றன. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து தமிழக அரசும் தனது அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழுவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்கள்.