கேரளாவினுடைய தங்கம் கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்டவை கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த பட்டரை உரிமையாளர் வீட்டில் எனவே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். கேரளாவில் ஒரு மிகப்பெரிய புயலை கிளப்பிய தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கோவை பவிலம் வீதியில் உள்ள தங்க பட்டறை உரிமையாளர் நந்த குமார் என்பவரது வீட்டில் காலை 7 மணியிலிருந்து சோதனையானது நடந்துகொண்டு வருகிறது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையானது நடைபெற்று வருகிறது.

நந்தகுமார் என்பவர் ஏற்கனவே கேரளா கைது செய்யப்பட்ட சொப்னா உடன் இருந்ததாகவும், அவர்கள் மூலமாக தங்கக் கட்டிகளை மாற்றி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கிட்டத்தட்ட டிஎஸ்பி சாகுல் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு தற்போது நந்தகுமார் வீட்டில் மற்றும் பட்டறையில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த சோதனையில் 38 சவரன் மற்றும் 2.75 லட்சம் பணமாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவரிடம் தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் எப்படி நடைபெற்றது ஏற்கனவே திருச்சியில் இதுபோன்ற பட்டறை உரிமையாளரிடம் விசாரணை நடந்தநிலையில் அங்கும் பல லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் எல்லைப் பகுதியாக இருக்கும் கோவை பகுதியில் ஏராளமான நகை பட்டறைகள் செயல்ப்பட்டு வருகிறது. எனவே சொப்ணா மீது தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து ஷோபனா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் நகை பட்டறை மூலமாக நந்த குமார் என்பவரிடம் இருந்து இங்குள்ள பல நகைக் கடைகளுக்கு தங்க கட்டிகளை மாற்றம் செய்து பணமாக பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.