ராமயணக் காவியத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக படமாக்க உள்ளனர், படத்தின் பட்ஜெட் 500 கோடி என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளார்.

‘பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸின் மார்கெட் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி பிரபாஸ் தொடர்ந்து பெரிய பெரிய பட்ஜெட் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ. 250 கோடி செலவிட ஒதுக்கப்பட்டுள்ளதாம். ‘ஆதிபுருஷ்’ இயக்குனர் ஓம் ராவத் இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானை ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் சையிப் அலிகான் இராவணன் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

தற்போது படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தில் அவருக்கு வெயிட்டான ரோல் என்பதால் கதை கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.