வுடி சங்கர் என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருக்கிறது. சென்னையில் ரவுடி சங்கர் என்பவர் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப் பட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்கிறது. சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நேற்றிலிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

என்கவுண்டர் நடந்த இடத்திற்கு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று வீடியோ பதிவு செய்து ஆய்வு செய்தார்கள். இந்த நிலையில் இந்த என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஏழு போலிசாருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்திர விடப்பட்டிருக்கிறது. குறிப்பாக கீழ்பாக்கம் உதவி ஆணையர் ராஜா, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர் முபாரக், தலைமை காவலர் ஜெயபிரகாஷ், தலைமை காவலர்கள் முருகன் ,வடிவேலு உட்பட மொத்தம் ஏழு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். என்கவுண்டர் நடந்த இடத்திற்கு சிபிசிஐடி பொலிசார் விசாரிக்கும்போது காவல் ஆய்வாளர் நடராஜன் அங்கு சென்று என்கவுண்டர் நடந்தது எப்படி என்று முழுமையாக விளக்கம் அளித்திருந்தார். அதனை வீடியோ பதிவு செய்து இருந்தார்கள். இந்த நிலையில் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதனடிப்படையில் சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது.