பொறியியல் பாடங்களில் அரியர் வைத்திருந்தால் அவர்கள் பணம் கட்டி இருந்தால் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் அப்படி அறிவித்தது செல்லாது ஏற்றுக்கொள்ள முடியாது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் உயர் கல்வித்துறை அமைச்சர் தங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று கூறுகிறார். மற்றொருபுறம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது என்னவென்றால் கலை அறிவியல் படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் பணம் கட்டி இருந்தால் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ தரப்பு படித்தவர்கள் படிக்காதவர்கள் இருவரும் சமமாக மாட்டார்கள்.

அனைவருக்குமான தேர்ச்சி ஏற்புடையது அல்ல என்றும் , அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தர வேறுபாடு சரியாக இருக்காது என்றும், நீதிமன்றத்தில் வழக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சில கல்வியாளர்கள் இந்த மனுக்கு எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் எதுவும் சரியாக அமையவில்லை என்பது அரசினுடைய கேள்வியாகவும் இருக்கிறது. இது வருங்கால கல்விமுறையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த முறை சரிதானா என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஐந்து மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர பிற ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் , அரியர் வைத்திருக்கும் பிற மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு இந்த மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையின் போது மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படாது என அம்மாநில அரசுகள் தாக்கல் செய்த பிரமான பத்திரத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஆட்சேபனை தெரிவித்ததோடு தேர்வை ரத்து செய்வதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியது. இதற்கு பதிலளிக்க யுஜிசி அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்க்கிடையே தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற செய்வது ஏற்புடையதல்ல என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம் எழுதியுள்ளது.

அதில் அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின் படி அனைத்து அரியர் தேர்வுக்குமான கட்டணத்தை செலுத்த வேண்டியது கட்டாயம் என்பதால் 30 பாடங்களுக்கும் மேல் அரியர் வைத்து இருக்கும் மாணவர்களும் தேர்ச்சி பெறும் சூழல் உருவாகியிருப்பதாகவும் அரசின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் ஏ ஐ சி டி இ தெரிவித்திருக்கிறது. ஏ ஐ சி டி இ யின் இந்த கருத்து அரசிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அரசின் முடிவே இறுதியானது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.