5மாத ஊரடங்கிற்க்குப்பின் சென்னை மெரினாவில் பொதுமக்கள் தடையை மீறி தங்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஊரடங்கு ஊரடங்கு தளர்வுகள் என தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்மையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கூட சென்னை மெரினா , தியேட்டர்கள் போன்றவற்றில் மக்கள் கூட கூடாது.

அதற்கான தடை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அதற்கான தடையை நீட்டித்து அந்த பகுதிகளில் அதிக காவல்துறையினர் வைத்து மக்கள் கூடுவதற்கான வாய்ப்பை தடுத்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் சென்னை மெரினாவை பொருத்தவரை மக்கள் யாரும் கூட முடியாத படி 144 தடை உத்தரவும் அமலில் இருக்கிறது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே பிரசித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தற்போது கடந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமையானது முது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தளர்வின் காரணமாக இந்த ஞாயிற்றுக் கிழமை மற்ற இடங்களில் குறிப்பாக டி நகர் புரசைவாக்கம் போன்ற வணிகப் பகுதிகளுக்கு மக்கள் அதிகம் சென்று கொண்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் தளர்வின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடிக் கொண்டிருக்கின்றனர். குடும்பம் குடும்பமாக தங்களுடைய இரு சக்கர வாகனங்களில், கார்களில் அதிக அளவு குவிந்ததால் சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கக்கூடிய லைட் ஹவுஸ் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.