நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஆறு மாநிலங்கள் மற்றும் புதுவை தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜெ இ இ மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட் உட்பட 6 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொற்று காலத்தில் தேர்வு நடத்துவதா மாணவர்கள் பல்வேறு காரணங்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகும்.

அது மாணவர்களிடையே சமநிலையற்ற தன்மையை உருவாக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு நீதிபதிகள் அறையில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்குகளை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என கூறி சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் வரும் 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுவது உறுதி ஆகியுள்ளது.