தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘ஆதித்ய வர்மா’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தனர். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தது.

ஆனால் அதற்கு முன்னதாக இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இதே குழு அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ எனும் தலைப்பில் படமாக்கிருந்தது. விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் அர்ஜுன் ரெட்டியை விட குறைவாகவும் கதையில் பாலா நிறைய மாற்றங்கள் கொடுத்திருப்பதாகவும் கூறி படத்தை வெளியிடாமல் ஸ்க்ராப் செய்தனர். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. அதனை தொடர்ந்து இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்தது.

இதனிடையே, வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் ரடிலால் அப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது வெறும் வதந்தி எனவும் அவர் கூறியுள்ளார்.