கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகவும் பிஸியான நாயகியாக இருந்து வருகிறார் டாப்ஸி. தன்னுடைய கேரக்டருக்கு முக்கியதுவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. முழுநீள காமெடி படமான இதன் படபிடிப்பை ஒரேகட்டமாக 28 நாட்கள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார்.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த தமிழ் சினிமா அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்போது மீண்டும் விறுவிறுப்பாக இயங்க துவங்கியுள்ளது. சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்த நிலையில் இப்போது ஜெய்ப்பூருக்கு கிளம்பியுள்ளார் விஜய் சேதுபதி. இதன் மூலம் கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் முதலில் கலந்துகொள்ளும் கதாநாயகன் என்ற பெருமையை பெறுகிறார் விஜய் சேதுபதி.