அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் பற்றி ஓ பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடும் வாக்குவாதம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. செயற்குழுவில் பல்வேறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் நேரடி வாக்குவாதமாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற வாதம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இனி ஒருங்கிணைப்பாளரிடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

ஓ.பி.எஸ் ஸை பொருத்தவரை தர்மயுத்தம் நடத்தி கட்சிகள் இரண்டாக பிரிந்து ,பின்பு அணிகள் சேர்ந்து இருந்த நிலையில் தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன் என்று அவர் கூறினார். அதேபோல முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி யும் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வமும் அவ்வாறு முடிவு செய்யப்பட்டபோது மிக முக்கியமாக இந்த ஆட்சி காலத்திற்கு மட்டும் தான் நான் துணை முதலமைச்சராக இருப்பேன் என்றும், அவர் ஆட்சி காலத்திலும் துணை முதலமைச்சராக செயல்பட முடியாது என்று அப்போதே தமது கருத்தை தெரிவித்ததாகவும்,

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொருத்தவரை அவர் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அதற்கு இ.பி.எஸ் நான் மட்டுமல்ல நீங்களும் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.