நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "அது ஓரு பேரின்ப கனாக்காலம் அனைவருக்கும் நன்றி"என குறிப்பிட்டுள்ளார்.

இவரும் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அது குறித்து விளக்கம் அளித்த கல்யாணசுந்தரம் கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக உள்ள தகவலில் உண்மை இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான ராஜீவ் காந்தியின் விலகல் குறித்து விளக்கம் கேட்க முயன்ற போது , ராஜீவ் காந்தி தரப்பிலோ , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பிலோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.