இயக்குனர் செல்வராகவன், புதுப்பேட்டை படத்தின் காட்சி மற்றும் வசனத்தை வைத்து மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் இ-பாஸ் முறை ரத்து, வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி,பேருந்து போக்குவரத்து இயங்கம் என பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் மீண்டும் கூட்டம் கூடும் நிலை உருவாகும் வாய்ப்பு அதிகமாகும். எனவே மக்கள் தங்களை தற்காத்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்த சமூகவலைத்தளங்களில் பல்வேறு விழிப்புணர்வு பகிரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் ‘புதுப்பேட்டை’ தனுஷ் கெட்டப்பை வைத்து ஒரு மீம்ஸ் போஸ்ட் செய்துள்ளார். அதில் குமார்(தனுஷ்) மாஸ்க் அணிந்து இருக்கிறார்."இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு... அது மட்டும் தன் மேட்டரு ",என செல்வா குறிப்பிட்டுள்ளார்.செல்வாவின் இந்த மெசேஜை பார்த்த ரசிகர்கள், ‘புதுப்பேட்டை 2’ படத்தின் அப்டேட் பற்றி கேட்கத் தொடங்கிவிட்டனர்.