ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உளவாளியாக பணிபுரிந்து வந்தார். பின்பு அந்த உளவுப் பிரிவிற்கு தலைவராக இருந்தார். இப்போது ரஷ்யாவின் அதிபராக இருக்கிறார். நிரந்தர அதிபராக இருக்க வேண்டும் என்பதற்காக புதின் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார் என்று அவருடைய விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். புதினை உள்நாட்டிலேயே எதிர்த்தும் வருகிறார்கள். ஊழல் அரசு என ஆதாரங்களை வெளியிடுவோம் என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி-க்கு டீயில் விஷம் வைத்ததாக புதின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர்கள் டீயில் விஷம் கலந்து இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அவருக்கு தற்போது ஜெர்மனியில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது மயங்கி விழுந்தார் மயங்கிய உடனே கோமா நிலைக்கும் சென்று விட்டார்.

அங்கு இருக்கும் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பின்பு ரஷியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது குடும்பத்தார் அவரை சூழ்ந்து கொண்டு நாங்கள் வேறு நாட்டிற்கு இவரைக் கொண்டு செல்கிறோம் ரஷ்ய நாட்டை நாங்கள் நம்பவில்லை என்று கூறினார்கள். ஏற்கனவே யார் யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களுக்கெல்லாம் டீயில் விஷம் வைக்கப்பட்டது. அதேபோல் இவருக்கும் விஷம் வைத்து விட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம் என கருதுகிறார்கள். விமான நிலையத்தில் அலெக்ஸி டீ அருந்தினார் அங்கேதான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதனால்தான் அவர் விமானத்திலேயே கோமா நிலைக்கு சென்று விட்டார் இதற்கு புதின் தான் காரணம் நாங்கள் ரஷ்யாவை நம்பவில்லை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பார்த்துக் கொள்கிறோம் என்று கூறவே ஜெர்மனி அதற்கு முன் வந்தது. ஜெர்மனியின் என்ஜிஓ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் உடனே ஒரு தனி விமானம் அனுப்பினார்கள். ரசிகர்களை நம்ப முடியாது என ஜெர்மனி டாக்டர் களையே விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர். ரஷ்ய டாக்டர்கள் விஷம் எல்லாம் ஒன்றுமில்லை நாங்கள் காப்பாற்றி விடுவோம் என்று அவர்கள் கூறினார்கள். ஜெர்மனி டாக்டர்கள் அவர்கள் கூறியதைக் கேட்காமல் அங்கிருந்து ஜெர்மனிக்கு கொண்டு சென்றனர்.

ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் ஒர் பெரிய மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெர்மனி டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு விஷம் தான் கலந்திருக்கு என்ற செய்தியை வெளியிட்டனர். இதனால் ரஷ்ய அதிபர் புதின் மீது பார்வை திரும்பியுள்ளது. உலக நாடுகள் அவரை சந்தேகிக்கிறார்கள். நவல்னிக்கு வைக்கப்பட்ட விஷத்தின் பெயர் நோவி சோக் இந்த விஷமானது சுவாசம் மற்றும் தோலின் மூலமாக உடலில் ஊடுருவும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டது. இந்த விஷம் உடலில் உள்ள மூளை, கண், நுரையீரல், இதயம் போன்றவற்றை தாக்க கூடியவை.