சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்த தவறினால் ஆண்டுக்கு இரண்டு விழுக்காடு தண்டம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டாவது அரை ஆண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத் தொகை செலுத்த நேரிடும் என்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகையைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.