பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 110 கோடி முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று தவணையாக 6,000 ரூபாய் வழங்கி வருகிறது மத்திய அரசு. வேளாண்துறையில் பதிவு செய்தபின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே இந்த உதவித்தொகையை பயனாளர்கள் பெறமுடியும். அதற்கு பயனாளரின் ஆதார் அட்டை வங்கி கணக்கு எண் நிலம் தொடர்பான பட்டா சிட்டா அங்கள் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் அலுவலகம் மூலமாக மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றப்படுவதுதான் நடைமுறையாக உள்ளது.

அதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஸ்கேன் செய்யப்பட்ட தகவல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரிடம் வழங்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மூலமாகவேபதிவு செய்யவும் முடியும் என்பதுதான். அந்த ரகசிய பாஸ்வேர்ட் வேலன் அதிகாரியிடம் இருக்க ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட போலி பயனாளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுகிறதா அந்தப் பாஸாவேர்டை பயன்படுத்தி தான் இந்த மோசடி சம்பவம் அரங்கேற்றப்பட்டிருபாபதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட வேளாண் துறை இயக்குநருக்கு 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்த இடைத்தரகர்கள் அந்த ரகசிய பாஸ்வேர்டை பெற்று மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்து ஆசி வாங்கிய இடைத்தரகர்கள் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பெற்று கொண்டு விவசாயிகள் அல்லாத தகுதியற்ற பயனாளர்கள் கிசான் திட்டத்தில் சேர்த்துவிட பட்டிருக்கின்றனர். இதன்மூலம் துன்பப்படும் விவசாயிகளுக்கு செல்லவேண்டிய உதவித்தொகை இதுநாள் வரை சிறிக சிறுக மோசடி செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியிருக்கிறது. இதில் தொடர்புடைய இடைத்தரகர் யார் அவர்களிடம் லஞ்சம் பெற்ற வேளாண் அதிகாரிகள் யார் இன்னும் எத்தனை மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்திருப்பது என்ற விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது சிபிசிஐடி.