திமுகவின் இன்றைய போராட்டம் தோல்வி என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக தமிழகத்தில் வேகமெடுத்து வளர்வதைப் பார்த்து திமுகவினர் அடிவயிறு பற்றி எரிவதாக தெரிவித்தார்.

விவசாயிகளை வைத்து அரசியல் செய்ய விரும்புபவர்கள் வேளாண் சத்தங்களை எதிர்ப்பார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திட்டங்கள் குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு புரிய வைப்பதற்காக கூட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியவரும் போது அதிக வரவேற்பு கிடைக்கும் என்றும் பாஜகவில் பதவி குறித்து பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.