கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று நடவடிக்கைக்காக பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூட வேண்டாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களுக்கும் பொதுமக்கள்,பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இந்தத் தடையானது நீடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.அதன்படி கிராமப்புற பகுதிகள் மற்றும் சிறிய நகர கோவில்கள் இயங்கு வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பெரிய கோவில்கள் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. சென்னையில் ஊரடங்கு தளர்வு என்பது வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்குமே திறப்பதற்கான அனுமதி அரசு வழங்கியது.

அந்த அடிப்படையில் தற்போது தற்போது சென்னையில் இருக்கக்கூடிய பெரும்பாலான கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மயிலாப்பூரில் இருக்கக்கூடிய கபாலீஸ்வரர் கோவிலில் மக்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் இந்தப் பகுதியில் திரளான பக்தர்கள் அதிக வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக வெளிப்பகுதிகளில் பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கோவில்நிர்வாகத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு வரிசையாக நின்று உள்ளே செல்கிறார்கள் . உள்ளே செல்லும்போது அவர்களுக்கு வெப்ப பரிசோதனையானது நடத்தப்படுகிறது.அதன் பிறகு தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடிய நபர்கள் அது தொடர்பான விவரங்களை விசாரித்த பின்பே இந்த கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆதார அடையாள அட்டை போன்ற விவரங்களைப் பெற்று டோக்கன் பெற்ற பிறகே மக்கள் அனுமதிக்கக் கூடிய சூழல் காண முடிகிறது. ஆயிரம் சதுர அடி இருக்கக்கூடிய கோவில்களில் 20 நபர்களுக்குள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட கூடிய சூழல் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மக்கள் வந்து சென்ற பிறகு கோவில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது ‌. இதுபோன்ற பல்வேறு கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருக்கிறது.கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று நடவடிக்கைக்காக பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூட வேண்டாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களுக்கும் பொதுமக்கள்,பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இந்தத் தடையானது நீடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.அதன்படி கிராமப்புற பகுதிகள் மற்றும் சிறிய நகர கோவில்கள் இயங்கு வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பெரிய கோவில்கள் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. சென்னையில் ஊரடங்கு தளர்வு என்பது வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்குமே திறப்பதற்கான அனுமதி அரசு வழங்கியது. அந்த அடிப்படையில் தற்போது தற்போது சென்னையில் இருக்கக்கூடிய பெரும்பாலான கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னை மயிலாப்பூரில் இருக்கக்கூடிய கபாலீஸ்வரர் கோவிலில் மக்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் இந்தப் பகுதியில் திரளான பக்தர்கள் அதிக வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக வெளிப்பகுதிகளில் பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கோவில்நிர்வாகத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு வரிசையாக நின்று உள்ளே செல்கிறார்கள் . உள்ளே செல்லும்போது அவர்களுக்கு வெப்ப பரிசோதனையானது நடத்தப்படுகிறது.அதன் பிறகு தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடிய நபர்கள் அது தொடர்பான விவரங்களை விசாரித்த பின்பே இந்த கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆதார அடையாள அட்டை போன்ற விவரங்களைப் பெற்று டோக்கன் பெற்ற பிறகே மக்கள் அனுமதிக்கக் கூடிய சூழல் காண முடிகிறது. ஆயிரம் சதுர அடி இருக்கக்கூடிய கோவில்களில் 20 நபர்களுக்குள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட கூடிய சூழல் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மக்கள் வந்து சென்ற பிறகு கோவில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது ‌. இதுபோன்ற பல்வேறு கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருக்கிறது.