சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் தற்போது நோட்டீஸானது ஒட்டப்பட்டிருக்கிறது. முடக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணி 90 நாட்களில் பதில் அளிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முடக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணி மேற்கொண்டுள்ளதாகவும் 90 நாட்களில் பதில் அளிக்குமாறும் தற்போது அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.போயஸ் தோட்டத்திலுள்ள வேதா இல்லத்திற்கு அருகாமையில் அரிச்சந்திரா எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறது.

இது சசிகலாவின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றிருக்கிறார்கள். 90 நாட்களுக்குள்ளாக இந்த நோட்டீஸ் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 1,500 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் பினாமிகளின் பெயரில் வைக்கப்பட்டு இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனடிப்படையில் அந்த சொத்துக்கள் படைக்கப்பட்டவை இதனை அடுத்து சென்னையில் போயஸ் தோட்டம் ஆலந்தூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்டன. அந்த 65 சொத்துக்களின் மதிப்பு 300 கோடி ரூபாய் அந்த 65 சொத்துக்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. போயஸ் தோட்டத்தில் உள்ள இந்த ஹரிஷ் ஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்கிற கட்டுமான நிறுவனம் கட்டி வரும் இந்த கட்டிடமும் அந்த 65 சொத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே அந்த கட்டிடத்தில் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நோட்டீஸ் பரப்பன் அக்ரஹார சிலையில் இருக்கக் கூடிய சசிகலாவிற்கும் அனுப்பபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது தொடர்பான விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டி இருக்கிறார்கள்.