வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் தற்போதைக்கு மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த இந்த நிலையில் பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வருவதற்கு பொதுமக்களிடமிருந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்திருப்பதாக முதல்வர் பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றி வரக்கூடிய ஏழாம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாற்றங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்திற்கு ஃபேமிலி எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.