ஆக்கிரமிப்பு அத்துமீறலுக்கு பெயர்போன நாடு சீனா. அங்கு ஜனநாயகத்திற்கெல்லாம் இடமில்லை ஒரே கட்சிதான் கம்யூனிசம். கம்யூனிஷ்ட் கட்சி தலைவர் தான் நாட்டின் தற்பொழுதைய சீனாவின் அதிபர். மிகவும் சக்திவாய்ந்தவராக உலகிற்கு அறியப்படுகிறார். அதேநேரத்தில் பல வகையில் அத்துமீறலில் ஈடுபடுகிறார். பாதிக்கப்பட்ட நாடுகளில் அண்டை நாடுகளான நம் இந்தியாவும் ஒன்று. இந்திய சீன எல்லையில் உச்சகட்ட பதற்றம் போர் மேகம் சூழும் அபாயம் எழுந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு இந்தியா சீனா எல்லைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது வெடிபொருட்கள் உபயோகிக்க கூடாது என்ற ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நேற்று எல்லைப்பகுதியில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு காண்பித்து ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டது சீனா. கடந்த 45 வருடத்தில் இதுவே முதல் முறை சீனா இதுபோல் செய்தது. இதனால் எல்லையில் 7,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையை நோக்கி நகரும் ராணுவ டேங்குகள், போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல சீனாவும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்னர் நடந்த சம்பவம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் , சீன ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் அத்துமீறி வந்ததால் இந்திய ராணுவ வீரர்கள் தட்டிக் கேட்டனர். அதனால் கைகலப்பு ஏற்பட்டு மலையின் மேலிருந்து கீழ் விழுந்ததில் ரத்தத்தை உறையச் செய்யும் அளவிற்கு கடும் குளிரான நதி ஓடுகிறது. அதில் விழுந்து நம் நாட்டு ராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகினர். அதே உயிரிழப்பு சீனாவின் பக்கம் நடந்து இருக்கிறது ஆனால் அதை வெளிப்படையாகவோ செய்தியாகவோ வெளியிடவில்லை . அதே போல கொரோனா குறித்து எந்த தகவலும் சரியான முறையில் வெளியிடவில்லை . சீனா தரப்பிலிருந்து இந்தியர்கள்தான் முதலில் சுட்டார்கள் அதனால் நாங்கள் வானை நோக்கி சுட வேண்டிய சூழ்நிலை ஆயிற்று என்று தெரிவித்துள்ளது.

ஆனால் சீனா நிலப்பரப்பை அபகரிக்கும் மோகத்தில் சீனாவை அத்துமீறி வானில் சுட்டது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன அமைச்சரோடு நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்திய மூன்றே நாளில் இதுபோன்ற சம்பவத்தில் சீனா ஈடுபட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்திய சீன எல்லையானது 3500 கிலோமீட்டர் கொண்டுள்ளது. இந்த நிலையானது இந்தியாவில் பல மாநிலங்களை கடந்து செல்கிறது. பல மாநிலங்களின் எல்லை சீனாவை ஒட்டி அமைந்துள்ளது. இந்திய சீன எல்லையில் வரையறுக்கப்பட்ட எல்லை என்று ஒன்று கிடையவே கிடையாது. அனைத்தும் மலை பகுதிகளாகவே காணப்படுகிறது. எல்லையை சரியாக நிர்ணயிக்க முடியவில்லை மேலும் மனிதன் வாழ தகுதியற்ற இடமாகவே கருதப்படுகிறது இதுதான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. இரு நாட்டு விமானப் படையினரும் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்திய சீன எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது.