இந்தியாவில் தினசரி சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகும் நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிப்பு என்ற நிலையை எட்டி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கோரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளொன்றிற்கு 90 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதியாகி வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இந்தியாவில் முதல் முறையாக இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட ஏழே மாதங்களில் கொரோணா பாதிப்பு 40 லட்சத்தை கிடைக்கும் என்றோ உலக அளவில் மொத்த பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்றோ யாரும் நினைக்கவில்லை. தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்திலிருந்து தான் வேகமெடுத்தது. முதல்முறையாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து மொத்த பாதிப்பு 10 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்ட 169 நாட்கள் ஆனது. ஆனால் அடுத்த 21 நாட்களில் அதாவது ஆகஸ்டு 7ஆம் தேதி நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது.

அடுத்த 14 நாட்களின் மொத்த பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது. அரசு அறிவித்த பொது முடக்க தளர்வுகளுக்கு இருக்கும் பிறகு வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கிறது. அடுத்த 13 நாட்களிலேயே புதிதாக 10 லட்சம் பேருக்கு வைரஸ் பரவி மொத்த பாதிப்பு 40 லட்சத்தை கடந்ததுவிட்டது. நாளொன்றுக்கு சுமார் 90,000 பேர் பாதிக்கப்படும் நிலையில் விரைவில் ஒரு நாள் பாதிப்பு ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை எற்றலாம் என்றும் 10 நாளில் 10 லட்சம் என்ற புதிய உச்சத்தை அடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.